நிமல் சிறிபால டி சில்வாவை நீக்க தடை உத்தரவு !!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த தடை உத்தரவு வரும் 20 ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.