வயோதிபப் பெண்ணின் சங்கிலி அபகரிப்பு !!
சாவகச்சேரி – கோவில்குடியிருப்பு கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்திற்கு வந்த வயோதிபப் பெண்ணின் சங்கிலி திருட்டுப் போயுள்ளது.
குறித்த ஆலயத்திற்கு நேற்று காலை வந்து வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் ஒன்றரைப் பவுண் தங்கச் சங்கிலியை இனந்தெரியாத நபர் ஒருவர் அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.
இதில், பெரியமாவடி சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவரின் சங்கிலியே இவ்வாறு அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.