;
Athirady Tamil News

யாழ் பல்கலைக்கழகம், யாழ் வர்த்தகத் தொழிற்துறை மன்றமும் புரிந்துணர்வு உடன்படிக்கை!!! (படங்கள்)

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடமும், யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றமும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் மூலம் இணைந்து கொண்டுள்ளன. இவ் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று 08 ஆம் திகதி புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு முகாமைத்துவக்; கற்கைகள்; வணிக பீட சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் உடன்படிக்கையின் பிரகாரம் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றம், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட மாணவர்கள், விரிவுரையளர்கள் போன்றவர்களுக்கும் பல்வேறு வழிகளில் நன்மையினை ஏற்படுத்தும். இப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் வாயிலாக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடமானது யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் நிலைபேறான அபிவிருத்திக்கு பாரிய அளவில் பங்களிப்பினை வழங்க முடியும்.

யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் அங்கத்தவர்களுக்கு தேவையான பயிற்சிகள், பயிற்சிப் பட்டறைகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், போன்றனவற்றுக்கு வளவாளர்களாக முகாமைத்துவ வணிக பீடத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் தொழிற்படுதலுடன் கொள்கைகள் மற்றும் செயற்திட்டங்களை வகுப்பதில் உதவுதல். குறுகியகால டிப்ளோமா, மற்றும் சான்றிதழ் கற்கைகளினை அறிமுகப்படுத்துதல் மூலமாக அங்கத்தவர்களின் தொழில் சார் அறிவினை பெருக்கி கொள்ள உதவுதல். தொமிற்துறை நடவடிக்கைகளில் ஏற்படுகின்ற நெருக்கடி நிலையினை சிறந்த முறையில் முகாமை செய்வதற்குரிய தந்திரோபாய ஆலோசனைகளினையும் உதவிகளினையும் வழங்குதல், ஆராய்ச்சி மற்றும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்குதாரர்களாக செயற்படுதல் வணிகத்தின் வளர்ச்சி ஆராய்ச்சிகள் ஆலோசனைகள் முதன்மையான இடத்தினை வகிக்கின்றது. இவ்வாறான ஆலோசனைகள் தேவைப்படும் போது முகாமைத்துவக்; கற்கைகள் வணிக பீடத்தின் நிபுணர் குழு தேவையான ஆலோசனைகளை வணிக குழாமுக்கு வழங்குவதன் மூலம் தொழிற்துறையின் செயற்பாட்டினை மேம்படுத்த உதவும்.

அதே போல இவ் உடன்படிக்கையின் மூலம் மாணவர் சமூகம் பல்வேறு வழிகளில் நன்மையினை பெற்றுகொள்ள வாய்ப்புக்கள் உள்ளது. மாணவர்களுக்கு தமது பட்டப்படிப்பின் ஓர் அங்கமாக அமைந்துள்ள உள்ளகப் பயிற்சிக்கான வாய்ப்பினை பெற்று கொள்வும். மாணவர்களுக்கு பகுதி-நேர வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுதலுக்கு உதவுதல். யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றம் செயற்படுத்தும் செயற்திட்டங்களில் மாணவர்கள் நேரடியாக பங்குபற்றி பயிற்சிகளை பெற்றுக்கொள்வதன் வழியாக மாணவர்கள் தங்கள் நடைமுறை அறிவினை விருத்தி செய்துகொள்வதுடன் விழிப்புணர்வையும் பெற்றுக்கொள்வர். சில மாணவர்கள் தொழில் முயற்சியாளர்களாக காணப்படுவதனால் இத்தகைய மாணவர்களின் பங்குபற்றுதல், உள்நாட்டு மட்டத்திலும் சர்வதேசே மட்டத்திலும், புதிய உற்பத்திகளுக்கு அங்கீpகாரம் பெற வழிசெய்யும். இதனால் மாணவர்கள் தமது உற்பத்திகளுக்கு அதிக சந்தை வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.

மாணவர்களிடையே காணப்படுகின்ற தொழில் முயற்சியாளர்களை யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்வதுடன் ஆண்டு தோறும் முகாமைத்துவக்; கற்கைகள் வணிக பீடத்தினால் நிகழ்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கும் “இளம் தொழில் முயற்சியாளர் தினத்தில்” சிறந்த மாணவர்களுக்கான விருதை வழங்குதல் போன்ற வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றமும் முகாமைத்துவக்; கற்கைகள்; வணிக பீடமும் ஒன்றிணைந்து வணிகக் கண்காட்சியினை எதிர்காலத்தில் ஏற்hடு செய்வதுடன் தொடர்ச்சிய இரு அமைப்புகளும் சேர்ந்து தொழில்முயற்சி பற்றி தொடர்ச்சியான விழிப்புணர்வினை மக்கள் மத்தியிலும் மாணவ சமூகத்துக்கு இடையேயும் ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்தவுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.