மருதமுனையில் பழைய விலைக்கு அரிசி விற்பனை- நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பு! (வீடியோ)
பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு பழைய விலைக்கு பொதுமக்களுக்கு அரிசினை பெற்றுக்கொடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட மருதமுனை பகுதியில் அரிசி பதுக்கல் இடம்பெறுவதாக வியாழக்கிழமை (9) நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.
இதற்கமைய அவ்விடத்திற்கு சென்ற நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் குழு அரிசி பதுக்கல் இடம்பெற்றதாக அடையாளம் காணப்பட்ட கடைக்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன் பழைய விலைக்கு அரிசிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் மருதமுனை பகுதியில் குறித்த கடையில் பொதுமக்களே உடனே விரையுங்கள்.குறைந்த விலையில் அரிசினை பெறுங்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளும் உள்ளனர் என அப்பகுதியில் உள்ள அந்நூர் பள்ளிவாசலின் ஒலிபெருக்கியிலும் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு அதிகளவான மக்கள் வருகை தந்து அரிசினை கொள்வனவு செய்து சென்றதை அவதானிக்க முடிந்தது.
இதே வேளை இவ்வாறான அரிசி பதுக்கல் செயற்பாட்டினை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் முறியடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”