அமைச்சுக்களின் விடயதானங்களில் மாற்றம்: வர்த்தமானி வெளியீடு !!
அமைச்சுக்களின் விடயதானங்கள் மற்றும் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2281/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தானி அறிவித்தலில், மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இன்று (10) முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் விடயதானங்கள் மற்றும் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டு புதிய அமைச்சுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன்படி தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு மற்றும் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு ஆகியன உருவாக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட தகவல் மற்றும் தொடர்பாடல் நிறுவனம், டெலிக்கொம் நிறுவனம் ஆகியன தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.