அரச சேவை தொடர்பில் விசேட ஆய்வு !!
அரச சேவை தொடர்பில் விசேட ஆய்வொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறைந்த நேரத்தில் ஆரோக்கியமான அரச சேவையினை பெற்றுக் கொடுப்பதற்கும் சேவை திருப்தியை அதிகரிக்கும் வண்ணம் இந்த ஆய்வை முன்னெடுக்குமாறு அவர் பணித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் போது அரச நிர்வாகம்,உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
அரச ஊழியர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை விரைவுபடுத்தவும் அரச ஊழியர்களிடம் அதிகபட்ச சேவையினை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சில அரச நிறுவனங்களை ஒன்றிணைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சில முக்கிய அரச நிறுவனங்களை மாகாணங்கள் ரீதியில் செயற்படுத்துவதன் ஊடாக அதிக அரச ஊழியர்கள் கொழும்பிற்கு வருவதை குறைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டகப்பட்டுள்ளது.