மந்தபோசணையுற்ற குழந்தைகள் உள்ள நாடுகளில் இலங்கைக்கு 2 ஆம் இடம்!!
தெற்காசியாவில் மந்தபோசனைக்குள்ளான சிறார்கள் அதிகம் காணப்படும் இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பிருந்தே இந்த நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிறார்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் அடங்கலாக வைத்தியசாலைகளிலுள்ள நோயாளர்களுக்கான மருத்துப்பொருட்கள் சடுதியாக குறைவடைந்து செல்வதாகவும் இலங்கையில் 5 சிறுவர்களில் இருவருக்கு மூன்றுவேளைகளும் உண்ணக் கிடைப்பதில்லை என புள்ளிவிபரங்கள் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”