;
Athirady Tamil News

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஊழல், முறைகேடுகள் !! (படங்கள்)

0

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக என்னால் பெறப்பட்ட ஆவணங்களே இவை. கடந்த காலங்களில் இவற்றை பெற்றிருந்த போதும் அதனை இன்று வரை பொது வெளியில் பகிரங்கப்படுத்தியிருக்கவில்லை. காரணம் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையிருந்தது.

ஆனால் வடக்கில் நடக்கின்ற ஊழல், முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது மிக மிக குறைவாகவே காணப்பட்டு வருகிறது. சாதாரண சிற்றூழியர்கள் செய்யும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் சட்டத்தை உச்சளவில் பயன்படுத்துகின்றவர்கள், அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெறும் ஊழல்கள் தொடர்பில் நோகாமல், கண்துடைப்புக்காக நடவடிக்கை மாதிரி ஒன்றை மேற்கொண்டுவிட்டு கடந்து சென்றுவிடுகிறார்கள்.

வடக்கை பொறுத்தவரை மில்லியன் கணக்கில் ஊழல் செய்து பிடிப்பட்டாலும் அதனை மாதாந்தம் செலுத்துகின்றேன். என எழுத்து மூலம் வழங்கிவிட்டு செலுத்தினால் போதும். இதுதான் நடவடிக்கை. இதனால்தான் இன்றுவரை ஊழல் முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியாதுள்ளது. கிராமம், பிரதேசம், மாவட்டம், மாகாணம், நாடு என அவரவர் நிலைக்கேற்ப ஊழல்களும், முறைகேடுகளும் இடம்பெற்றுக்கொண்டேயிருக்கிறது.
அந்த வகையில் கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற முறைகேடுகளே இவை.

உலக உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கான சமைத்து உணவு வழங்குவதற்காக வழங்கப்பட்ட பொருட்களில் இடம்பெற்ற மோசடியை வெளிப்படுத்திய ஆவணங்கள் இவை.
1. பதிவேற்றில் உள்ள பொருட்களில் அளவுக்கும், களஞ்சியத்தில் இருப்பில் உள்ள பொருட்களின் அளவுக்கும் இடையில் வேறுபாடுகள்
2. களஞ்சியத்தில் அன்றி எந்த பதிவுக்கும் உட்படாது வகுப்பறையில் காணப்பட்ட பொருட்கள்
3. சட்டத்திற்கு புறம்பாக சமையல் செய்பவருக்கு குறித்த மீதியாக வரும் பொருட்களை வழங்குவதாக அதிபரின் ஒப்புதல் மற்றும் அவ்வாறு பொருட்கள் காணப்பட்டமை தவறு இனி அவ்வாறு இடம்பெறாது என அதிபர் எழுத்து மூலம் வழங்கிய உறுதிமொழி என்பன இவை.
நாளை மறுதினம் மற்றொரு ஊழல்,முறைகேடுகளை வெளிப்படுத்திய ஆவணங்களுடன் சந்திப்போம்.

மு.தமிழ்ச்செல்வன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.