உரும்பிராய் பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது!!
போதை ஊசி பயன்படுத்தி சந்தேகம் உயிரிழந்திருக்கலாமென சந்தேகம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் சிவன் வீதியை அண்மித்த வாழைத்தோட்டம் ஒன்றின் மோட்டார் வைக்கும் அறையினுள்ளிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் கோப்பாய் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது
இறந்தவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட மோட்டார் வைக்கும் அறையினுள் போதை ஊசிகள் பயன்படுத்தப்பட்டதற்கான தடையங்கள் கிடந்துள்ளதுள்ளதுடன் இறந்தவர் போதை ஊசி பயன்படுத்தியிருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றார்கள்
குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டுவருகின்றார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”