பொறுப்புக்கூறலை உறுதி செய்யவேண்டும்: மிச்சேல் பேச்லெட் !!
இலங்கை அரசாங்கம், மிகவும் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான உடனடி நிவாரணத்தை உறுதி செய்யுமாறும், நிர்வாக ரீதியில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும், நல்லிணக்கம் மற்றும் நீதியை முன்னெடுப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பேச்லெட் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத்தொடர் நேற்று (13) ஜெனிவாவில் ஆரம்பமாகியது. பேரவையில் அறிக்கையொன்றை முன்வைத்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பேச்லெட் இலங்கை குறித்து இவற்றை கூறியுள்ளார், அவரது அறிக்கையில் மேலும் கூறியுள்ளதானது,
இலங்கை அரசாங்கம், மிகவும் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான உடனடி நிவாரணத்தை உறுதி செய்யுமாறும் அதேபோல் மீட்பு வேலைத்திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் வேளையில் சமூகப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
நிர்வாக ரீதியில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும், ஏற்றத்தாழ்வுகளை தவிப்பதற்கும், அனைத்து சமூகங்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் மற்றும் நீதியை முன்னெடுப்பதற்கும் நிறுவன மட்டத்தில் ஆழமான சீர்திருத்தங்களில் கூடிய கவனம் செலுத்தப்படும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.