ராணுவ செலவுகளை குறைக்கும் ‘அக்னிபாத் திட்டம்’- ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார்..!!
மத்திய அரசின் பட்ஜெட்டில் இந்திய ராணுவத்துக்கு தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கொரோனா காரணமாக ராணுவத்தில் ஆட்சேர்ப்பு பணிகள் முற்றிலுமாக முடங்கின. இதுபோன்ற சூழ்நிலையில் ராணுவத்தில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ராணுவத்தின் மூன்று பிரிவுகளிலும் 1.25 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன.
இந்த நிலையில், அக்னிபாத் என்ற புதிய ராணுவ ஆள் சேர்ப்பு திட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிமுகம் படுத்தினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:- டூர் ஆப் டியுடி என்ற இந்த திட்டத்தில் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். ராணுவ செலவுகளை குறைக்கும் வகையில் முப்படைகளிலும் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே பணி. ‘அக்னிபாத்’ திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மேலும் அதிகரிக்கும் என்றார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.