ஒழுக்கத்துடன் கல்வி கற்று மாணவர்கள் உயர் பதவிகளை அடைய வேண்டும் விழுப்புரம் கலெக்டர் அறிவுரை..!!
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர் பள்ளி தொடங்கிய நாள் முதலே உடனடியாக தமிழக அரசின் இலவச பாடப் புத்தகங்களை வழங்குமாறு தமிழக முதல்வர் கல்வித்துறைக்கு அறிவித்திருந்தார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் விழுப்புரம் மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள நகராட்சி உயர்நிலை பள்ளி மாணவ-மாணவிகளை வரவேற்று இனிப்புகளை வழங்கி அறிவுரை வழங்கினார். அப்பொழுது அவர் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் கூறியது போல் பள்ளிகள் சுத்தம் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் சுத்தமாக இருந்தால்தான் ஒழுக்கம் தானாக வரும்ஒழுக்கத்துடன் சிறப்பாக முன்னேற முடியும்.முயல் ஆமை கதை உங்களுக்கு தெரியும் முயலும் வெல்லும். ஆமையும் வெல்லும். ஆனால் முயலாமை எப்போது வெல்ல முடியாது. ஆகையால் ஒழுக்க கட்டுப்பாட்டுடனும்கல்வி பயின்றுஎங்களைப்போன்ற அதிகாரிகளாக வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்துபள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், நகரசபைத் தலைவர் தமிழ்ச்செல்வி,நகராட்சி கமிஷனர் சுரேந்தர்ஷா, தாசில்தார் ஆனந்தகுமார், நகர தி.மு.க. செயலாளர் சர்க்கரை,கவுன்சிலர்கள் உஷா மோகன்,பத்மநாபன் முன்னாள் கவுன்சிலர் சண்முகம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பத்மநாபன், செயலாளர் வண்டி மேடு ரபிக், துைணத் தலைவர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.