அரசியல் தலைவர்கள் மீது அமலாக்கத் துறையை ஏவுவதா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!!
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருவதற்கு முதலமைச்சர் மு.க. கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் பழிவாங்கும் எண்ணத்தோடு மத்திய பா.ஜ.க. அரசு அமலாக்கத் துறையைப் பயன்படுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நாட்டில் உள்ள மக்களின் அன்றாட அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாத பாஜக இது போன்ற அரசியல் திசை திருப்பும் நாடகங்களின் மூலமாக தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்க்கிறது. அரசியல் தலைவர்களை அரசியல் களத்தில் எதிர்கொள்ள வேண்டுமே அல்லாமல், அமலாக்கத்துறையை ஏவி அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.