குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான செய்தி!!
சீனாவினால் இந்நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசித் தொகுதியொன்று எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு வந்தடையவுள்ளது.
500 மில்லியன் ரென்மின்பி பெறுமதியான அரிசியின் முதல் தொகுதியுடனான கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
சீனாவினால் வழங்கப்படும் அரிசி தொகை ஆறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.
இரண்டாவது தொகுதி அரிசியை ஏற்றி வரும் கப்பல் எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பை வந்தடைய உள்ளது.
பாடசாலை உணவுத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 10,000 மெட்ரிக் தொன் அரிசி வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் வௌியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தியாவினால் நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அரிசித் தொகை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.