;
Athirady Tamil News

ஶ்ரீ லங்கன் விமான சேவை விசேட அறிக்கை!!

0

UL 504 விமானம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 504 ரக விமானம் ஒன்று மற்றுமொரு விமானத்துடன் மோதுவதைத் தவிர்த்ததாக வெளியான ஊடக செய்தி தொடர்பில் ஶ்ரீலங்கன் விமான சேவை அவதானம் செலுத்தியுள்ளது.

அதன்படி, கடந்த 13 ஆம் திகதியன்று லண்டனில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான UL 504 ரக விமானத்தின் விமானிகள் எவ்வித ஆபத்துமின்றி குறித்த விமானத்தை இயக்கியதை நாம் உறுதிப்படுத்துகிறோம்.

இருப்பினும், சில ஊடக செய்திகளின் படி, UL 504 விமானம் மற்றொரு விமானத்துடன் மோதும் அபாயத்தை ஏற்படுத்தவில்லை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.

எங்கள் விமானிகளின் புத்திசாலித்தனமும், விமானத்தின் அதிநவீன தகவல் தொடர்பு அமைப்பும் விமானத்தை பாதுகாப்பாக பறக்க உதவியது.

மேலும், பயணிகள், பணியாளர்கள் மற்றும் மதிப்புமிக்க உபகரணங்களைப் பாதுகாத்து குறித்த விபத்தைத் தடுத்த UL 504 விமானத்தின் விமானிகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாராட்டுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.