வலிகாமம் வடக்கு மக்களின் இடப்பெயர்வின் 32ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வழிபாடுகள்!! (படங்கள், வீடியோ)
வலிகாமம் வடக்கு மக்களின் இடப்பெயர்வின் 32ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று காலை 11 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது.
இதன் வலிவடக்கு பகுதிகள் முழுவதும் விடுவிக்ககோரி வழிபாடுகள் இடம்பெற்றதுடன் வழிபாட்டின் நிறைவில் சிதறுதேங்காய் அடிக்கப்பட்டது.
இந்த வழிபாடுகளில் வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலிகாமம் வடக்கிலிருந்து அங்கிருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதன் 32 வருடங்கள் இன்று நிறைவுறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”