வெள்ளிக்கிழமை விடுமுறை; சுற்றறிக்கை வெளியானது !!
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னவினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும், வாரத்தின் வேறு ஏதேனும் நாளில் அரச விடுமுறை வழங்கப்பட்டால், அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமையை சாதாரண நாளாகக் கருதி அலுவலகங்களைத் திறக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.