திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆந்திரா முழுவதும் 24 இடங்களில் கோசாலை அமைக்கப்படுகிறது..!!
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தியானம் மற்றும் யோகாசனம் செய்வதற்காக தரிகொண்ட வெங்கமாம்பா தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
தியான மண்டபத்தை தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூடுதல் செயல் அலுவலர்கள் சதாபார்கவி, வீரபிரம்மம், நரசிம்ம கிஷோர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆந்திரா, தெலுங்கானாவில் தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
கோவில்கள் கட்டப்படும் இடங்களை சேர்த்து 24 இடங்களில் தேவஸ்தானம் சார்பில் கோசாலைகள் அமைக்கப்பட உள்ளது. கோசாலையில் உள்ள பசுக்களுக்கு அதன் அருகிலேயே புல் மற்றும் தீவனம் வளர்க்கப்படும். தற்போது திருப்பதி மற்றும் பலமனேர் கோசாலையில் உள்ள பசுக்கள் பாதுகாப்பாகவும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. இதேபோல் புதிதாக அமைக்கப்படும் கோசாலைகளும் சிறப்பாக பராமரிக்கப்படும் என்றார்.