அக்னிபத் திட்டத்தில் பணிக்கான வயது வரம்பு 23 ஆக அதிகரிப்பு – பாதுகாப்புத் துறை..!!
ராணுவத்தில் புதிதாக சேர விரும்புவோருக்கான மிக முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதுவிதமான ராணுவ பணி நியமன முறையை டூர் ஆஃப் தி டூட்டி என்று அழைக்கிறார்கள். இத்திட்டத்திற்கு அக்னிபத் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அக்னிபத் திட்டத்தில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இந்திய ராணுவத்தில் இது ஒரு புதுவிதமான முயற்சி. இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள்.
அதன் முடிவில் அவர்களுக்கு ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தப் பணி நியமன திட்டம் மூலம் 45,000 முதல் 50,000 வீரர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், அக்னிபத் திட்டத்தில் பணிக்கான வயது வரம்பு 21-ல் இருந்து 23 ஆக அதிகரித்து பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது.