நுரைச்சோலையின் ஒரு பகுதிக்கு பூட்டு – மின் வெட்டு அதிகரிக்கப்படுமா?
300 மெகாவோட் திறன் கொண்ட நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக இன்று (17) நள்ளிரவு முதல் மூடப்படவுள்ளது.
அதாவது 80 நாட்களுக்கு இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மின்சார உற்பத்தி குறைந்தாலும் தற்போதைய மின்வெட்டு அதிகரிக்கப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
வருடாந்தம் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புக்காக நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி இன்று நள்ளிரவு முதல் இவ்வாறு மூடப்படவுள்ளது.
எவ்வாறாயினும், மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் எரங்க குடாஹேவா தெரிவிக்கையில்,
“தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் எமக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும், குறைந்தபட்சம் 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்குள் இந்த மின்வெட்டைத் பராமரித்துச் செல்ல முயற்சித்து வருகிறோம்.