கஞ்சா தொடர்பில் புதிய தீர்மானம்!!
கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையில் வழக்குப் பொருட்களாக முன்வைக்கப்படும் தொகையைத் தவிர, ஏனைய தொகையை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைப்பதற்கான சட்டத் தடைகளை நீக்குவது குறித்து நீதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
நீதி சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான நடைமுறையை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க முன்னர் ஒப்படைக்கப்பட்ட தொகை மற்றும் அழிக்கப்பட்ட தொகை குறித்த அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திடம் கையளிக்கப்படவுள்ள கஞ்சாவை அதன் பாதுகாப்பு உட்பட ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திற்கு கொண்டு செல்லும் பொறுப்பை பொலிசார் ஏற்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.