நண்பர்கள் குரலை மட்டுமே கேட்கிறார் பிரதமர் மோடி- ராகுல்காந்தி கடும் தாக்கு..!!
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அதனை திரும்ப பெற வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:- அக்னிபாத்-இளைஞர்கள் நிராகரித்தனர். விவசாய சட்டம்-விவசாயிகள் நிராகரித்தனர்.
பண மதிப் பிழப்பு-பொருளாதார நிபுணர்கள்நிராகர்த்தனர். ஜி.எஸ்.டி.-வர்த்தகர்கள் நிராகரித்தனர். நாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது பிரதமருக்கு புரியவில்லை. ஏனென்றால் அவர் தனது நண்பர்களின் குரலை தவிர வேறு எதையும் கேட்க வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பிரியங்கா காந்தி டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, 24 மணி நேரம் கூட கடந்து செல்லாத நிலையில் புதிய ராணுவ ஆள் சேர்ப்பு திட்டத்தின் விதிகளை பா.ஜனதா அரசாங்கம் மாற்றியமைத்தது. இதன் மூலம் இத்திட்டம் இளைஞர்கள் மீது அவசர அவசரமாக திணிக்கப்படுகிறது என்பதை காட்டுகிறது. இந்த திட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும்.
விமானப் படையில் நியமனங்களை வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட ஆள் சேர்ப்பு முடிவுகளை வெளியிட வேண்டும். முன்பு போல் ராணுவ ஆள் சேர்ப்பை (வயது தளர்வுடன்) நடத்துங்கள். இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.