நெருக்கடியிலிருந்து விரைவில் மீள முடியாது – மத்திய வங்கிஆளுநர் !!
சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே சென்றிருந்தால், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து சிக்கலின்றி மீண்டெழ முடிந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெளியிலிருந்து உதவிகளை பெற்றுக்கொள்வதை தாமதப்படுத்தியமை தவறு எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை விரைவில் வழமைக்கு திருப்ப முடியாது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.
இலங்கையின் சிறந்த நண்பன் என்ற வகையில் சீனா, ஏனைய கடன் வழங்குநர்களிடமிருந்து ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்கும் என தாம் நம்புவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.