அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – சஜித் பிரேமதாஸ!!
வரிசையில் நின்று அவதிப்படும் மக்களின் வலியையும்,வேதனைகளையும் புரிந்து கொள்ளாத ஆட்சியாளர்களின் பயணத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
வீட்டில் பசியால் வாடும் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்கள் சார்பாகவும், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வியை இழந்து எதிர்காலம் குறித்து விரக்தியடைந்துள்ள இளைய தலைமுறையின் பெயரில் இந்நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நாட்டைச் சேர்ந்த இருபது இலட்சம் வெளிநாட்டு வாழ் மக்களுக்கு அழுத்தம், ஏமாற்றம் மற்றும் துன்பங்களை உரிமையாக்கிய இந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம், தங்களுடைய திறமையற்ற தன்மை,
இயலாமை என்பனவற்றையே மீண்டும் மீண்டும் நிரூபிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று 18) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.