கேரளாவில் போலீஸ் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர் – சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு..!!
கேரளா மாநிலம் ஆலப்புழா, காயங்குளம் பகுதியில் கேரள மாநில போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடிக்க முயன்ற போது திடீரென அவர் வீச்சரிவாளால் இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்றார். சுதாரித்து கொண்ட இன்ஸ்பெக்டர் லாவகமாக செயல்பட்டு வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் அங்கு நின்ற பொதுமக்களும் வாலிபரை மடக்கினர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாலிபர் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயல்வதும் அவரை இன்ஸ்பெக்டர் பிடிக்க முயன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதனைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன், சாதுர்யமாக செயல்பட்டு வாலிபரை மடக்கிய இன்ஸ்பெக்டரை பலர் பாராட்டி வருகின்றனர்.