47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் சண்டிகருக்கு மாற்றம் – மத்திய அரசு..!!
மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி பகிர்வு தொகை, பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிகளை மாற்றியமைப்பது போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 47-வது கூட்டம் ஸ்ரீநகரில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூன் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் அனைத்து மாநில நிதி மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் மாநிலங்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள வரி மாற்றங்கள், கேளிக்கை விடுதிகள் (கேசினோக்கள்), குதிரை பந்தயம் (ரேஸ் கோர்ஸ்கள்), ஆன்லைன் விளையாட்டு மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 47-வது கூட்டம் ஸ்ரீநகருக்கு பதிலாக சண்டிகருக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.