;
Athirady Tamil News

பிரதமர் மோடியின் தாயார் நூறாவது பிறந்த நாளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!!

0

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், இன்று தனது வாழ்வின் 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்நிலையில் காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் தமது தாயாரை நேரில் சந்தித்த பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கும், அவரது தயாருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: அன்புள்ள நரேந்திர மோடி அவர்களே, தங்கள் தாயார் இன்று தமது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தாய் மீதான தங்கள் பாசத்தை நான் நன்கறிவேன். ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் எனது தாயாரின் உடல்நலன் குறித்து தாங்கள் விசாரிப்பதை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். இந்தச் சிறப்பான நாளில், தங்கள் தாயாருக்கும் தங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.