அரிசி விலை மோசடி சந்தேக நபருக்கு சுமார் 3 இலட்சம் தண்டப்பணம் விதிப்பு!!
அரிசி ஆலைகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் கடந்த (12.06.2022) ஞாயிறு அன்று சுற்றிவளைப்பொன்று அம்பாரை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட தலைமை அதிகாரி சாலிந்த நவரத்ன பண்டார தலைமையில் மேற்கொள்ளபட்டிருந்தது.
இதன் போது கடந்த மே மாதம் 2 ம் திகதி வெளியிட பட்ட அதி விஷேட வர்த்தமான கட்டளை இலக்கம் 82 ல் குறிப்பிடப்பட்டுள்ள சிவப்பு/ வெள்ளை நாடு வேக வைத்த உள்நாட்டு அரிசி ( சாப்பாட்டு அரிசி) கட்டுப்பாட்டு விலை ஒரு கிலோவுக்கு 220 ரூபாவாக ஆக வெளியிட பட்ட நிலையில் கூடுதல் விலைக்கு 240 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பலர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
நிந்தவூர் பிரதேச எல்லைக்குள் அரிசி ஆலை ஒன்றினுள் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை புலனாய்வு உத்தியோகத்தர்கள் திடீர் விஜயம் செய்து ஆலை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கானது கடந்த வெள்ளிக்கிழமை (17) சம்மாந்துறை நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபருக்கு சுமார் 3 இலட்சம் தண்டப்பணம் செலுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
குறித்த சட்டமானது 2021ம் ஆண்டின் 20ம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திருத்த சட்டத்தின் படியே இந்த தண்ட பணம் விதிக்க பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”