;
Athirady Tamil News

50 சதவீத தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடும் !!

0

தனியார் பஸ்களுக்கு, இ.போ.ச பஸ் டிப்போக்களில் உரிய முறையில் எரிபொருளை வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதால், நாளை தொடக்கம் 50 சதவீத தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாடுபூராகவும் 10,000க்கும் அதிகமான தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இ.போ.ச பஸ் டிப்பாக்கள் ஊடாக தினமும் 8 இலட்சம் லீற்றர் எரிபொருளை தனியார் மற்றும் இ.போ.ச பஸ்களுக்கு வழங்க எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணக்கம் தெரிவித்துள்ளதால், இந்த தீர்மானத்தை எடுத்ததாக தனியார பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த வாரத்துக்குள் 70 சதவீத தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.