யாழ்.கீரிமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கீரிமலை புதிய கொலணி பகுதியை சேர்ந்த சங்கிலியன் நடராசா (வயது 63) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”