;
Athirady Tamil News

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்: எம்.பி.க்களுக்கு, மக்களவை சபாநாயகர் வலியுறுத்தல்..!!

0

மக்களவை சபாநாயகர் ஒம்பிர்லா, பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது : அரசியலமைப்புச் சட்டத்தின்படியே பாராளுமன்றம் செயல்படுகிறது. அரசியலமைப்பின் முன் அனைத்து மதங்களும் சமம். எம்.பி.க்கள் எந்த மதத்தைப் பற்றியும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். எல்லா நேரங்களிலும் பாராளுமன்றத்தின் கண்ணியத்தையும் ஒழுங்கையும் காக்க வேண்டும். 17வது மக்களவையில் இதுவரை எட்டு அமர்வுகளின் கீழ் 1,000 மணி நேரம் சபை செயல்பட்டுள்ளது. உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசும்போது தேவையற்ற ஆக்கிரமிப்பு மற்றும் கூச்சலிடுவதை தவிர்க்க வேண்டும். விவாதங்கள் எதிர் விவாதங்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தை அலங்கரிக்கின்றன. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மேடையாக பாராளுமன்றத்தை எம்.பிக்கள் பயன்படுத்தக் கூடாது. புதிய பாராளுமன்ற கட்ட பணிகளை முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் புதிய பாராளுமன்றத்தில் நடைபெறும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.