யாழில் இரண்டு வாரங்களில் 41 வழக்குகள் பதிவு !!
யாழ். மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 41 புதிய வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் என்.விஜிதரன் தெரிவித்தார்
இந்த மாதத்தில் முதலாம் திகதியிலிருந்து அரிசி சம்பந்தமாக 41வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
மொத்த வியாபார நிலையங்கள், அரிசி ஆலைகளை நாங்கள் பரிசோதித்திருக்கின்றோம்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளில் மூன்றுக்கு மேற்பட்ட அரிசி ஆலைகளை பரிசோதித்திருக்கின்றோம். இதன்போது விலை மாற்றம் தொடர்பிலான வழக்குகளை பதிவு செய்திருக்கின்றோம்.
அத்தோடு அவர்களின் அரிசி இருப்பு விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்திருக்கின்றோம்.
விலை மாற்றம் தொடர்பில் மூன்று வழக்குகள் பதிவு செய்திருக்கின்றோம். பதுக்கல் தொடர்பில் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. அத்தோடு கட்டுப்பாட்டு விலையை மீறியோருக்கு எதிராக 10 பேருக்கு வழக்கு பதிவு செய்திருக்கின்றோம்
இவை உள்ளடங்களாக அரிசி சம்பந்தமாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.