அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு- பீகார், ஜார்கண்ட், பஞ்சாப் மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம்..!!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படும் மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் உள்பட பல அமைப்புகள் சார்பில் இன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பீகார், ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதையொட்டி சம்பந்தப்பட்ட மாநிலங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஜார்க்கண்ட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கஜார்க்கண்ட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்கள், குறிப்பாக பேருந்தில் பயணம் செய்பவர்கள், எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை என்று அம்மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சர்மா தெரிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாரத் பந்த்தையொட்டி அசாம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டனர். ஜெய்ப்பூரில் நேற்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் ஆணையர் அஜய்பால் லம்பா, தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் பாரத் பந்த் காரணமாக ஹவுரா ஸ்டேஷன், ஹவுரா பாலம், சந்த்ராகாச்சி சந்திப்பு, ஷாலிமார் ரயில் நிலையம் மற்றும் ஹவுரா உள்பட பல இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.