அங்கீகரிக்கப்படாத 111 கட்சிகளின் பதிவு ரத்து – தேர்தல் ஆணையம்..!!
நாடு முழுவதும் 2,100-க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாக தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்தது. குறிப்பாக நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தன. எனவே அந்தந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் மூலம் இந்த கட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்றால் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்நிலையில், இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவை தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இந்த 111 அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்த முகவரியில் செயல்படாதது தெரிய வந்தது. தேர்தல் செலவுகள் உள்ளிட்ட விவரங்களையும் தாக்கல் செய்யாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இம்மாத தொடக்கத்தில் 87 கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.