;
Athirady Tamil News

அமரர் சிவகுரு சிவதரசன் நினைவாக பொதுக் குழாய்க் கிணறு ஈலிங் அன்னை ஊடாக பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது.!! (படங்கள்)

0

லண்டனில் சென்p வருடம் அமரத்துவமடைந்த சிவகுரு சிவதர்சன் அவர்களது முதலாமாண்டு நினைவாக அன்னாரது லண்டன் வாழ் நண்பர்களது நிதிப் பங்களிப்பில் இன்று வவுனியா ஓமந்தை பணிக்கர் புளியங்குளம் கிராமத்தில் நீண்ட நாள் நன்னீர் கோரிக்கையின் நிவர்த்தி செய்யும் வகையில் பொதுக் குளாய்க் கிணறு அமைக்கப் பெற்று வன்னிப் பாராளூமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் பாவனைக்காக  கையளிக்கப்பட்டது.

ஓமந்தை பணிக்கர் புளியங்குளம் மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையினை தாயக ஜனனம்.வவுனியா அமைப்பினர் லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாக சபையினரிடம் முறையாக தெரிவித்ததின் பயனாக ஆலய செயலாளர் கௌரவ சொ.கருணைலிங்கம் ஐயா அவர்களது துரிதகரமான முயற்சியின் பயனாக லண்டனில் சென்ற வருடம் அமரத்துவமடைந்த சிவகுரு சிவதரசன் அவர்களது ஞாபகார்த்தமாக அவரது லண்டன்வாழ் நண்பர்களது நிதிப்பங்களிப்பில்

ஓமந்தை பணிக்கர் புளியங்குளம் வழிகாட்டி அந்தோணியார் ஆலய சுற்றுவட்டார பொது இடத்தில்  குளாய் கிணறு அமைக்கப்ட்டு கையளிக்கப்பட்டது.  தமிழருவி த.த.சிவகுமாரன் ஐயா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக வன்னி பாராளமன்ற உறுப்பினர்களான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்.வவுனியா தெற்கு தமிழ்பிரதேச்சபையின் தவிசாளர் திரு தருமலிங்கம் யோகராசா ஆகியோருடன்  கல்வித் திணைக்கள உத்தியோகத்தர் முரளி ஆசிரியர் அவர்கள் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர்.பெரியண்ணன்  ஆதிசிவன் ஆலய பூசகர்.வரதன் அவர்கள் உட்பட கிராம மக்கள்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மௌனவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில்  அமரத்துவமடைந்த சிவகுரு சிவதர்சன் அவர்களுக்கு ஆத்மசாந்தி பூசை நடைபெற்று அன்னார்நினைவாக தானம் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து  கலந்து கொண்ட பிரமுகரகளின் அஞ்சலி உரைகளும. இடம்பெற்றது..முடிவாக அமரத்துவமடைந்த சிவகுரு சிவதர்சன் அவர்களின் முதலாமாண்டு நினைவாக தாயக உறவுகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு ஆத்மசாந்தி நிகழ்வுகளோடு அமரர் சிவகுரு சிவதர்சன் அவர்களது முதலாமாண்டு நினைவு உணர்வுப் பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.