பிளஸ் 2 தேர்வு எழுதி 443 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு..!!
தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் 5-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 10,12 வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.இதில் விடைத்தாள் திருத்தம் முடிக்கப்பட்டு 10, 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எள்ளுப்பாறை பகுதியை சேர்ந்த தமிழ்செல்வியின் மகள் யோகலட்சுமி 12 ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் உடல்நல குறைபாட்டால் இவரின் கண்பார்வை குறைய தொடங்கியது பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் கண்பார்வை முழுமையாக இழந்த நிலையில் தன்னம்பிக்கை யோடு இவர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வெற்றிப்பெற்றவர். இந்த மாணவி 600 மதிப்பெண்ணுக்கு 443 மதிப்பெண் பெற்றார். இவரை பாராட்டும் வகையில் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் கண்பார்வை இழந்த மாணவிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தன்னம்பிக்கை யோடு படித்து தேர்வு எழுதி மாணவி வெற்றிப்பெற்றதை ஆய்வாளர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.மாணவிக்கு கேக் வெட்டிக் பொண்ணாடை போர்த்தி ரொக்கபரிசு வழங்கினார்.அப்போது உதவி ஆய்வாளர்கள் மோகன், ரவி மற்றும் போலீ–்சார் உடனிருந்தனர். அமைச்சர்கள் மா சுப்பிரமணி ஆர்.காந்தி எம்பி ஜெகத்ரட்சகன், ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நாகராஜ் ஆகியோர் மாணவியை நேரில் பார்த்து ஆறுதல் கூறி பாராட்டு தெரிவித்தனர். மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர். பண உதவி வழங்கினார். மேலும் மாணவியின் கோரிக்கை ஏற்று அமைச்சர் ஆர்.காந்தி மேற்படிப்புக்கு உதவி செய்வதாக தெரிவித்தார்.