சிவசேனாவில் எதிர்ப்பு அணி உருவானது எப்படி?: பரபரப்பு தகவல்..!!
சிவசேனாவை சேர்ந்த மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டேவால் மராட்டிய கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர் சிவசேனாவை சேர்ந்த ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்களை குஜராத் மாநிலத்துக்கு அழைத்து அங்குள்ள ஓட்டலில் தங்க வைத்து கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். தனது குடும்ப விசுவாசியான ஏக்நாத் ஷிண்டே இப்படி எதிர்ப்பு அணியை உருவாக்குவார் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயால் கணிக்க முடியாமல் போய்விட்டது. கடந்த 2019-ல் சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்த போது ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேவுக்கு வலது கரமாக இருந்தார். சிவசேனா மட்டுமின்றி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் தங்க வைத்து கூட்டணி ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக இருந்தார். அப்போது, அவர் தான் முதல்-மந்திரியாக நியமிக்கப்படுவார் என கூறப்பட்டது. எனினும் கடைசி நேரத்தில் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், அவர் முதல்-மந்திரி ஆகும் வாய்ப்பு கைநழுவி போனது. இருப்பினும் சட்டமன்ற குழு தலைவராக அவர் பதவி வகித்து வந்தார். இதையும் படியுங்கள்: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா கடந்த சில நாட்களுக்கு முன் கூட சிவசேனா 56-வது ஆண்டு விழாவில் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் இருந்தார். இதேபோல அவர் கடந்த வாரம் ஆதித்ய தாக்கரேவுடன் அயோத்தியும் சென்று வந்தார். இந்தநிலையில் அவரது முடிவு கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேயின் அதிருப்திக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. சிவசேனாவில் உத்தவ் தாக்கரேக்கு அடுத்தப்படியாக தனக்கு தான் முக்கியத்துவம் கிடைக்கும் என்று ஏக்நாத் ஷிண்டே நம்பியிருந்தார். ஆனால் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் கூட சிவசேனா 56-வது ஆண்டு விழாவில் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் இருந்தார். இதேபோல அவர் கடந்த வாரம் ஆதித்ய தாக்கரேவுடன் அயோத்தியும் சென்று வந்தார். இந்தநிலையில் அவரது முடிவு கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேயின் அதிருப்திக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. சிவசேனாவில் உத்தவ் தாக்கரேக்கு அடுத்தப்படியாக தனக்கு தான் முக்கியத்துவம் கிடைக்கும் என்று ஏக்நாத் ஷிண்டே நம்பியிருந்தார். ஆனால் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
மேலும் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியை சந்தித்து முறையிடும்போது, அவரது பெரும்பாலான வேலைகள் நடக்காததால் கட்சியின் மீது அவர் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. குறிப்பாக ஏக்நாத் ஷிண்டேவின் நகர்புற மேம்பாடு, பொதுப்பணித்துறையை முதல்-மந்திரி அலுவலகம் நேரடியாக கண்காணித்து வந்து உள்ளது. முக்கிய முடிவுகளுக்கு முதல்-மந்திரி அலுவலகத்தின் ஒப்புதலை முதலில் பெற வேண்டி இருந்து உள்ளது. இதன் காரணமாக ஏக்நாத் ஷிண்டேவால் அவரது துறையில் கூட சுதந்திரமாக செயல்பட முடியாமல் போனதாக தெரிகிறது. இதேபோல நகர்புற மேம்பாட்டு துறையில் ஆதித்ய தாக்கரேயின் தலையீடும் இருந்து உள்ளது. இதுதவிர சமீபத்தில் நடந்த எம்.எல்.சி. தேர்தலில் ஆதித்ய தாக்கரே ஆதரவாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. சமீபத்தில் நடந்த மாநிலங்களவை, எம்.எல்.சி. தேர்தல் பொறுப்புகள் கூட சஞ்சய் ராவத்திடம் கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால் கட்சியின் தலைமை மீது ஏக்நாத் ஷிண்டே மிகுந்த அதிருப்தியில் இருந்து உள்ளார்.
இதுதவிர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை கட்சி எம்.எல்.ஏ.க்களால் கூட எளிதில் அணுக முடியவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால் பலர் ஏக்நாத் ஷிண்டேவுடன் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு நிதி, போலீஸ் உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை வைத்திருக்கும் தேசியவாத காங்கிரஸ் ஒத்துழைப்பை வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனையெல்லாம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பா.ஜனதா அரசியல் விளையாட்டை விளையாட தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகம், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களை போல மராட்டியத்திலும் தாமரை ஆபரேசன் திட்டத்தை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது.
https://www.maalaimalar.com/news/national/opposition-form-shiv-sena-sensational-information-475812?infinitescroll=1