பசிலுக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினராக இன்று தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம்..!!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா இன்று (புதன்கிழமை) காலை நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
அவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணையின்றி உயர் நீதிமன்றத்தால் நேற்று நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு பதிலாக தம்மிக்க பெரேரா தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து, தம்மிக்க பெரேராவின் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகு என்றும் எனவே, உடனடியாக அதனை இரத்துச் செய்யுமாறு கோரி, ஐந்து மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
எனினும் குறித்த மனுக்களை உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.