உலக சாதனை படைத்து அசத்திய நுஹான் நுஸ்கி..!!
நூருல் ஹுதா உமர்
கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய எனும் ஊரைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை நுஹான் நுஸ்கி எனும் சிறுவன் 19 வினாடிகளில் அனைத்து அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் கண்டு சர்வதேச சாதனை புத்தகத்தில் (International Book of Records) தனது பெயரினை பதிவு செய்து உலக சாதனை படைத்து தனது பொற்றோர்களுக்கும், நாட்டுக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் காணும் முதலாவது உலக சிறுவன் எனும் அந்தஸ்தை தனதாக்கிகொண்டார்.
ஏற்கனவே இதையே சாதனையை நிகழ்த்தி ஆசியா சாதனை புத்தகத்தில் தன் பெயரை பதிவு செய்த இச் சிறுவன் அண்மையில் உலக சாதனைக்கு விண்ணப்பித்ததுடன் இவரது திறமையை பரிசீலனை செய்து உலக சாதனை சிறுவனாக தமது இணையத்தளத்தில் வெளியிட்டதுடன் தற்போது இவருக்கான பரிசில்கள், பதக்கங்கள் என்பன வீடு வந்து சேர்ந்துள்ளன.
முஹம்மட் நுஸ்கி, பாத்திமா ரஸீனா ஆகிய தம்பதிகளின் செல்வப் புதல்வனான இச்சிறுவன் இரண்டு வயதில் இச் சாதனையை நிகழ்த்தி இருப்பதுடன் தனது ஊரில் இவ்வுலக சாதனை நிகழ்த்திய முதலாவது சிறுவனாக இருப்பது விசேட அம்சமாகும்.
மேலும் இந்த குழந்தை சென்ற வருடம் எ.எம்.ஆர் டோக் அமையத்தின் மூலம் சிறந்த தேர்ச்சி மிக்க குழந்தை என தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.