;
Athirady Tamil News

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டப்படிப்பை தொடர வேண்டும் -லக்ஸ்ரோ மீடியா நெட்வொர்க் உபவேந்தரிடம் கோரிக்கை..!!

0

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டப்படிப்பை தொடர வேண்டும் -லக்ஸ்ரோ மீடியா நெட்வொர்க் உபவேந்தரிடம் கோரிக்கை

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கை நெறியை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும் இதழியல் பட்டப்படிப்பை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என லக்ஸ்டோ மீடியா நெட்வொர்க் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான எழுத்து மூலமான கோரிக்கையை அமைப்பின் தலைவர் ஏ. எல். அன்சார், செயலாளர் யூ.எல்.எம்.பசீல் உள்ளிட்டவர்கள் கையொப்பமிட்டு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர். றமீஸ் அபூபக்கருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கோரிக்கை மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

ஊடகப் பரப்பில் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்ற நமது பிராந்தியத்தில் ஊடகத் தோடு பயணிக்கும் பலரை ஆற்றுப்படுத்தி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்
இதழியல் டிப்ளோமா பாடநெறியை சிறப்பாக நடாத்தி மாணவர்களை பாராட்டி கெளரவப்படுத்திய தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கும் அதன் உபவேந்தக்கும் வளவாளர்கள் அனைவருக்கும் எமது அமைப்பு சார்பாக பாராட்டுகிறோம்.

ஊடகத்துறையில் பட்டப் படிப்பின் மூலமாக ஊடக அறிவையும்
அனுபவத்தையும் பெற பலர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்
ஊடகத்தின் மூலமாக உயர் பட்டப் படிப்பை உருவாக்குவது காலத்தின் தேவையுமாகும் என்பதை உணர்கிறோம்.
மேலும் இதழியல் டிப்ளோமா பயிற்சியை மீண்டும் ஆரம்பித்து புதிய ஊடக மாணவ சமூகத்தினருக்கு வாய்ப்புகளை
வழங்க உதவுமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.