மலசலம் கழித்தமைக்கு 100 ரூபாய் !!
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற நபரொருவர் வர்த்தக நிலையத்தின் மலசலக்கூடத்தை பயன்படுத்தியமைக்காக, வர்த்தகர் ஒருவர் 100 ரூபாய் அறவிட்ட சம்பவமொன்று ஹோமாகம கொடகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ஓட்டோ சாரதியொருவர் தன்னுடைய ஓட்டோவுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மேற்படி பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு வந்துள்ளார்.
சில நாட்கள் காத்திருந்தார். அந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் முடிந்துவிட்டமையால் இன்னும் இரண்டு நாட்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அவ்வாறு காத்திருந்த போது மலசலக்கூடத்துக்கு செல்லவேண்டிய தேவை அந்நபருக்கு ஏற்பட்டது.
அருகிலிருந்த வர்த்தக நிலையத்துக்குச் சென்ற அந்நபர், தன்னுடைய பிரச்சினையை அந்த வர்த்தகரிடம் எடுத்துரைத்துள்ளார்.
வர்த்தக நிலையத்துக்கு பின்னால் இருக்கும் மலசலக்கூடத்தை காண்பித்து அங்குச் செல்லுமாறு ஓட்டோ சாரதியிடம் வர்த்தகர் கூறியுள்ளார்.
தன்னுடைய இயற்கை உபாதையை நிறைவு செய்துவிட்டு திரும்பிய ஓட்டோசாரதி, வர்த்தகருக்கு நன்றியைத் தெரிவித்தவிட்டு வர்த்தக நிலையத்திலிருந்து வெறியேற முயன்றுள்ளார்.
எனினும், ஓட்டோ சாரதியை தடுத்துநிறுத்திய வர்த்தகர் மலசலக்கூடத்தை பயன்படுத்தியமைக்காக 100 ரூபாய் கேட்டுள்ளார்.
அப்போதுதான், ஓட்டோ சாரதிக்கு தெய்வம் நினைவுக்கு வந்தது.
போனதை மீளவும் பெறமுடியாது என நினைத்துக்கொண்ட ஓட்டோ சாரதி, 100 ரூபாயை வர்த்தகரிடம் கொடுத்துவிட்டு வர்த்தக நிலையத்தில் இருந்து வெளியேறினார்.