பிரதமர் மோடியை சந்தித்தார் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு..!!
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வரும் முர்மு, ஒடிசாவில் இருந்து நேற்று புறப்பட்டு புதுடெல்லி வந்தார். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், புதுடெல்லி வந்த திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்களைச் சந்தித்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதள பக்கத்தில் கூறுகையில், திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருப்பதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். நாட்டில் நிலவி வரும் அடிமட்ட பிரச்னைகள் பற்றிய அவரது புரிதல் மற்றும் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை சிறப்பானது என குறிப்பிட்டுள்ளார்.