லங்கம வழக்கில் இருந்து வெல்கம விடுவிப்பு !!
போக்குவரத்து அமைச்சராக பதவியில் இருந்தபோது இலங்கை போக்குவரத்து சபைக்கு (லங்கம) பாரிய நட்டத்தை ஏற்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் எம்.பியுமான குமார் வெல்கம, அந்த வழக்கில் இருந்து இன்று (24) விடுவிக்கப்பட்டார்.
தான் அமைச்சராக பதவிவகித்த போது, இலங்கை போக்குவரத்து சபைக்கு பிரதி தலைவர் பதவிநிலையை உருவாக்கி, அரசாங்கத்துக்கு 33 இலட்சம் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மீண்டும் வழக்கை தாக்கல் செய்வதற்கான நிபந்தனையுடன் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் சந்தேகநபரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.
அந்த கோரிக்கையை கவனத்தில் எடுத்த கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க, வழக்கின் பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் குமார் வெல்கமவை இன்று (24) விடுவித்தார்.