நுண்நிதி டிப்ளமோ கற்கைநெறி அறிமுக நிலை!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தினால் நடாத்தப்படும் நுண்நிதி டிப்ளமோ கற்கைநெறியின் ஐந்தாம் அணி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு நாளை 26 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை, முற்பகல் 9.30 மணிக்கு, கலாசாலை வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில், பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
ஒரு வருடக் கற்கைநெறியான இந்தக் கற்கைநெறியில் வங்கித்துறையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் , நிதி நிறுவனங்களில் பணி புரிபவர்கள் என ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்து உள்ளனர்.
நுண்நிதி துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இக் கற்கைநெறி ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.
இக் கற்கைநெறினை கற்பதன் மூலம் நுண்நிதி பற்றிய அறிவினை பெற்று கொள்வதோடு, இத்துறையில் வேலை செய்யும் உத்தியோகத்தினரின் பதவி உயர்விற்கும் இக் கற்கைநெறி ஒரு படிக்கல்லாக அமையும் என்பது இக் கற்கைநெறியின் சிறப்பம்சம் ஆகும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”