;
Athirady Tamil News

பசித்தோருக்கு உணவளிக்க கைகோர்ப்போம்” வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.!! (படங்கள்)

0

“பசித்தோருக்கு உணவளிக்க கைகோர்ப்போம்” எனும் வேலைத்திட்டம் ஒன்றை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (25) நடைபெற்றது.

நடைபெற்றது.பொது சமூக சேவை அமைப்பின் ஆலோசனைக்கு அமைவாக சம்மாந்துறை சமூக சேவைகள் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் இணைந்து ஏற்பாடு செய்தனர்.
சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரி பாடசாலைக்கு முன்னால் அமைக்கப்பட்ட செயலணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கும் போது,

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பொருளாதாரம் பின்னடைவை நோக்கி நகர்ந்து செல்லும் நிலையில் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது , அதன் அடிப்படையில் சம்மாந்துறை மண்ணிலும் அதன் பாதிப்பு அதிகரித்து வருகின்றது . இக்காலகட்டத்தில் ஒரு வேளை உணவிற்கு போராடும் பலர் எம்மத்தியிலும் உள்ளனர் என்பதையிட்டு மிகவும் மனம் வருந்துகின்றோம்.

இந்நிலைமையினை நிவர்த்திக்கும் வகையில் எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக “பசித்தோர்க்கு உணவளிப்போம்” எனும் தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளோம். இத்திட்டமானது வீடுகளில் பகல் உணவு சமைக்கும் போது மேலதிகமாக குறைந்தது ஒரு உணவு பார்சலையாவது சமைத்து எம்மிடம் கையளிக்கவும். உங்களிடம் இருந்து பெறப்படும் உணவு பார்சல்களை தேவையுடையவர்களை அறிந்து அவற்றை விநியோகிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

முடியுமானவர்கள் உலருணவுகளையும் வழங்க முடியும் என மக்களை கேட்டுக்கொண்டனர்.
மேலும் மக்கள் உங்கள் வீட்டு உணவு பார்சல்களை வழங்குவதற்கு அன்றைய தினம் காலை 9.00 மணிக்கு முன்னர் எங்களை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களில் மிகவும் சிறந்தவர்கள் ஏழைகளுக்கு உணவளிப்பவர்கள் ” ஆதாரம் ( அஹ்மத் ) ‘ என்றனர்.

இவ்வாரம்ப நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.எம். நௌசாத், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம். கபீர், சமாதான கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் எஸ்.எல்.எம். றியாஸ், தொழிலதிபர் கலாநிதி வஸீர், ஊர் முக்கியஸ்தர்கள், வர்த்தக பிரமுகர்கள், சம்மாந்துறை சமூக சேவைகள் அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.