சொகுசு காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; பொலிஸ் கான்ஸ்டபிள் கைது !!
கொழும்பு வெளிவட்ட நெடுஞ்சாலையில் அத்துமீறி நுழைந்து மோட்டார் சைக்கிளில் சென்ற சொகுசு காருடன் மோதுண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக வீதியின் அதுருகிரிய போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் பெம்முல்ல காவற்துறையில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஆவார்.
இந்த விபத்தில் கான்ஸ்டபிளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மேலும் சந்தேகநபர் கடுவலையில் இருந்து கடவத்தை நோக்கி பயணித்த அதே வீதியில் கடவத்தையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த சொகுசு கார் பயணித்துள்ளது.
கொத்தலாவல அதிவேக வீதியில் இருந்து மாத்தறை நோக்கிய வீதியில் கான்ஸ்டபிள் நுழைந்து மாத்தறை வீதியில் சுமார் 100 மீற்றர் தூரம் பயணித்த போது, திரும்பி கடவத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சொகுசு காரின் முன்பக்க இடது பக்கம் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட போது,கான்ஸ்டபிள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுருத்த சாந்தசேகரவின் பணிப்புரையின் பேரில் அதிவேக வீதி போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சி.எஸ்.பி சிந்தக குணரத்ன, ஏ.எஸ்.பி கபில அபேநாயக்க மற்றும் கொழும்பு வெளிவட்ட நெடுஞ்சாலை உப பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ்.அசோக குமார தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.