பஸ் கட்டணம் குறித்து முடிவெடுக்க நாளை பேச்சு !!
பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, நாளை விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பஸ் தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து பொறுப்பு வாய்ந்த பிரிவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கட்டணம் தொடர்பில் இன்றைய தினம் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென பஸ் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இல்லை என்றால் நாளை முதல் பஸ் சேவையில் இருந்து விலக நேரிடும் என, பஸ் சங்கங்கள் எச்சரித்துள்ளன.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஜுலை 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலான வருடாந்த கட்டண திருத்தம் ஆகிய இரண்டையும் கருத்திற் கொண்டு 35 சதவீத கட்டண அதிகரிப்பு தேவைப்படுவதாக பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.