காங்கேசன்துறை சரக்கு படகு சேவையை ஆரம்பிக்க அனுமதி !!
தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு படகு சேவையை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஜூலை 1 ஆம் திகதியிலிருந்து சரக்கு படகு சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
குறித்த படகு சேவை மூலம் தேவையான மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும், உரம், பால்மா, மருந்து பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் எடுத்துவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.