;
Athirady Tamil News

ஒரு பாலின திருமணம் வழக்கு -இந்திய பெண் விடுதலை செய்யப்பட்டார்!! (படங்கள், வீடியோ)

0

ஒரு பாலின உறவு-இலங்கை முஸ்லீம் நண்பியை கரம் பிடிக்க வந்த இந்திய பெண் விடுதலை

ஒரு குழந்தையின் தாயாரான முஸ்லீம் பெண் ஒருவரை திருமணம் செய்ய இலங்கைக்கு வருகை தந்த தென்னிந்திய தமிழ் பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆந்திகதி வரை குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று(27) மீண்டும் குறித்த வழக்கு நீதிவானின் சமாதான அறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இரு பெண்களின் உளநல மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முதலாவது சந்தேக நபரான 19 வயது மதிக்கத்தக்க 1 அரை வயது குழந்தையின் தாயாரை ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவித்து பெண்கள் காப்பகமொன்றில் அவரது குழந்தையின் எதிர்கால நலன் மற்றும் குறித்த பெண்ணின் நடத்தை கோலங்கள் தொடர்பில் அறிக்கை கிடைக்கும் வரை ஒப்படைக்குமாறும் எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆந்திகதி வரை குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அத்துடன் இரண்டாவது சந்தேக நபரான 24 வயது மதிக்கத்தக்க தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியான தமிழ் பெண்ணில் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படாமையினால் அவர் தொடர்பில் முன்னிலையான பெண் சட்டத்தரணி இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் ஒப்படைத்து சொந்த இடத்திற்கு மீள அனுப்புவதற்கு விடுத்த விண்ணப்பத்தை பரீசீலனை செய்த நீதிவான் இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியை விடுவித்து அனுமதி வழங்கினார்.

மேலும் எவ்வித குற்றச்சாட்டுகள் இன்றி விடுவிக்கப்பட்ட இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியை அழைத்து செல்ல மட்டக்களப்பில் இருந்து வேன் ஒன்றில் பெண்கள் உரிமை தொடர்பான அமைப்பு ஒன்று பெண் சட்டத்தரணியுடன் வருகை தந்து அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளும் இவ்வழக்கில் பிரசன்னமாகி முதலாவது சந்தேக நபரான 19 வயது மதிக்கத்தக்க முஸ்லீம் பெண் தாயாரின் 1 அரை வயது குழந்தையின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.இவ்விடயத்தையும் மன்று கவனத்தில் எடுத்து தாய் மற்றும் குழந்தையை பெண்கள் காப்பகத்தில் வைத்து பராமரிக்குமாறு கட்டளையிட்டது.

இந்த வழக்கில் முதலாவது சந்தேக நபரான 19 வயது மதிக்கத்தக்க முஸ்லீம் பெண்ணின் முறைப்பாட்டாளர்களான பெற்றோர் கணவன் சார்பாக சட்டத்தரணிகளான ஏ.எம் ஜெனீர் மற்றும் எம்.ஐ றிஸ்வான் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியான தமிழ் பெண்ணிற்கு மட்டக்களப்பில் இருந்து பெண்கள் உரிமைக்கான அமைப்பொன்றின் அணுசரனையில் பெண் சட்டத்தரணி ஒருவர் ஆஜராகி இருந்தார்.

கடந்த புதன்கிழமை (22) அன்று இவ்விடயம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று நீதிமன்றத்தினால் இரு பெண்களையும் இவ்வாறு உலநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தார்.இரு பெண்களையும் கல்முனை ஆதார வைத்தியசாலை மனநலப் பிரிவில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இதன் பின்னர் மேற்படி பெண்கள் இருவரும் நீதிமன்றக் கட்டளையின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதற்கமைய இன்று(27) மீண்டும் குறித்த வழக்கு நீதிவானின் சமாதான அறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இரு பெண்களின் உளநல மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முதலாவது சந்தேக நபரான 19 வயது மதிக்கத்தக்க 1 அரை வயது குழந்தையின் தாயாரை ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவித்து பெண்கள் காப்பகமொன்றில் அவரது குழந்தையின் எதிர்கால நலன் மற்றும் குறித்த பெண்ணின் நடத்தை கோலங்கள் தொடர்பில் அறிக்கை கிடைக்கும் வரை ஒப்படைக்குமாறும் எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆந்திகதி வரை குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை (20) இந்தியாவிலிருந்து அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனது முஸ்லீம் நண்பியைத்தேடி தமிழ்நாட்டினை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் வந்துள்துள்ளதுடன் இருவரும் நண்பிகளாக தொலைபேசி மூலம் உரையாடி வந்ததாகவும் தற்போது திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து அக்கரைப்பற்று முஸ்லீம் பெண்ணின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர் .

மேற்படி பெண்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் திருமணம் செய்துள்ள நண்பி ஒருவர் மூலம் தொலைபேசியூடாக தொடர்பினை பேணியுள்ளதுடன் முஸ்லீம் பெண்ணிற்கு திருமணமாகி ஒன்றரை வயது மகளும் கணவரும் இருக்கின்றார் பெண்ணின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி, அவரின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.