சுதந்திரமாக உலாவும் காரணகர்த்தாக்கள் !!
எரிபொருள் நெருக்கடிக்கு காரணமான முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் தொடர்ந்தும் இருந்து வருகின்றனர் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, எரிபொருள் நெருக்கடிக்கு காரணமானவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என்று குற்றம் சுமத்தினார்.
கொழும்பில் இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நிறுவனங்களை பதிவு செய்துள்ளதாகவும் எனினும், கோரப்படாத முன்மொழிவுகள் மூலம் எரிபொருளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆறு எரிபொருள் ஏற்றுமதிகளை இறக்குமதி செய்வதாக உறுதியளித்த போதிலும், அண்மையில் இலங்கைக்கு ஒரு கப்பலேனும் வரவில்லை என்றார்.
2012ஆம் ஆண்டு தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்ட போது எரிபொருளின் தரம் காரணமாக வாகனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர்,
கால விலைமனுக்கோரல்கள் மற்றும் உடனடி விலைமனுக்கோரல்கள் நடைமுறையில் இருப்பதாகவும் கோரப்படாத முன்மொழிவுகள் எரிபொருள் விநியோகத்தை பாதிப்பதுடன், கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்றார்.